டோங்காவில் கடலுக்கடியில் பாரிய எரிமலை வெடிப்பு

பசுபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தது.

இதையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகிய நிலையில், நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்து,சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்து; இலங்கைக்கு 2.15 மில்லியன் டொலர் இழப்பீடு!

Leave a Reply