ஓட்டமாவடி பாலத்திற்கு கீழ் மிதந்த சடலமொன்றின் தலை; தேடும் பணிகள் தீவிரம்

வாழைச்சேனை – ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று சனிக்கிழமை 3 மணியளவில் சடலமொன்றில் தலை மிதந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைத்த தகவலுக்கமைய தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

ஓட்டமாவடிப் பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலமொன்றின் தலை மிதந்த நிலையில் காணப்படுவதை கண்டுள்ளார்.

இந்த நிலையில், கிரான் பகுதியில் ஆற்றில் காணாமல் போன மாணவர்களின் சடலமோ என்ற சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆற்றில் மிதந்தது சடலமா, அல்லது ஏதும் கழிவுப் பொருட்களா என பொலிஸார் மற்றும் சுழியோடிகள் சந்தேகத்தோடு ஆற்றில் பல்வேறு பகுதிகளிலும் தேடிக் கொண்டிருப்பதை காண முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனை கேள்வியுற்ற மக்கள் ஓட்டமாவடி பாலத்தில் குவிந்து காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான்! ஜீவன் தொண்டமான்

Leave a Reply