இமாச்சல் நிலச்சரிவு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இமாச்சலப் பிரதேசம் கிண்ணார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலச்சரிவில் 60 பேர் வரையில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகின்ற நிலையில், 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட குறித்த நிலச்சரிவில் குன்று ஒன்று முழுவதுமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply