இலங்கைக்கு வலுக்கட்டாயமாக கொண்டு வரப்படும் ஒமிக்ரான் தொற்றாளர்கள்! சுகாதார வல்லுநர்கள் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கைக்கு ஒமிக்ரான் நோயாளிகளை வலுக்கட்டாயமாக கொண்டு வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சுமத்தியுள்ளார்.

விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கு வந்த இலங்கையின் சமூகத்துக்குள் ஒமிக்ரான் தொற்றை பரப்பி விட்டு நாடு திரும்புகின்ற நிலை இன்று உருவாகியுள்ளது.

எனவே, இலங்கையின் சுகாதார கொள்கைகள் பிழையானவை.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கையில் ஒமிக்ரானின் அதிகரிப்பு விகிதம் 50ஆக உயரக்கூடும்.

இதேவேளை, அபேக்ஷா மருத்துவமனைக்கு 88 மில்லியன் ரூபா செலவில் எடுத்து வரப்பட்டுள்ள மரபணு வரிசை பரிசோதனை கருவி கடந்த பல மாதங்களாக பாவனையின்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் இறக்குமதியில் கலப்படம்! – வெளியானது தகவல்

Leave a Reply