தனுசு ராசிக்கு செவ்வாய் செல்வதால் இந்த ராசிக்காரங்க அதிக பிரச்சனையை சந்திக்க போறாங்க…

நவகிரகங்களில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். அதோடு செவ்வாய் “கடவுளின் தளபதி” என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தகைய செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து வெளியேறி, தனுசு ராசிக்கு 2022 ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.26 மணிக்கு இடம் பெயர்கிறார்.

செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும். சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷத்தை உருவாக்கும்.

இத்தகைய செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம் – மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் கவனம் பணியை நிறைவேற்றுவதிலும், புதிய விஷயங்கள் மற்றும் திட்டங்களில் முயற்சி செய்வதிலும் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது உயர்வு கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்கள் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். இக்காலம் உங்கள் தந்தைக்கு மிகவும் சாதகமாக இருக்காது. எனவே உங்கள் தந்தையின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். நிதி ரீதியாக நிலைமை நன்றாக இருக்கும். உறவுகளில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம் – ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். எந்த விதமான சண்டையிலும் ஈடுபடாதீர்கள். சிறுநீர் அல்லது பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு யாரும் ஆதரவாக இல்லாதவாறு உணர்வீர்கள். இக்காலத்தில் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த இக்காலகட்டத்தில், உணர்வுகளுக்கும் நடைமுறைக்கும் இடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

மிதுனம் – மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்பால் இலக்குகளை அடைவீர்கள். இக்காலத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவீர்கள். நிதி நிலைமை ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்கும். எனவே நீங்கள் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வரலாம். எனவே இந்த காலகட்டத்தில் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியை கடைபிடிக்க வேண்டும்.

கடகம் – கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் தைரியமாக இருப்பீர்கள். இந்த காலத்தில் குளிர்ச்சியான மனநிலையை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலையில்லாதவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் சிறந்த முடிவுகளை பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி ரீதியாக, இந்த காலம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். உங்களின் உணர்ச்சிகளால் உறவில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் மிகவும் நல்ல நிலையில் இருக்கும்.

சிம்மம் – சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக, இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். வேலைகளை மாற்ற முயற்சிப்பவர்கள் அல்லது சிறந்த வாய்ப்புகளைத் தேடுபவர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றியைப் பெறலாம். நிதி ரீதியாக, இந்த காலகட்டம் பலனளிக்கும். மேலும் உங்கள் முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெறலாம். உங்கள் உறவில் மூன்றாவது நபரை ஈடுபடுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள், ஏனெனில் அது உங்கள் மோதலை அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு பிள்ளைகளால் சில பிரச்சனைகள் வரலாம். மாணவர்கள் உயர்கல்வியில் ஆர்வமாக இருந்தால், நல்ல பலன் கிடைக்கும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரலாம் என்பதால் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்களுக்கும் சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன; எனவே கவனமாக இருங்கள்.

கன்னி – கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சாதகமான முடிவுகளைப் பெறலாமல் போகலாம். மேலும் நீங்கள் இக்காலத்தில் அமைதியற்றவராக உணர்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை ஏமாற்றும் வாய்ப்புகள் உள்ளன; எனவே உங்கள் குடும்ப உறுப்பினருடனான உங்கள் உறவு மோசமாகாமல் இருக்க உங்கள் ஆக்ரோஷமான நடத்தையை சரிசெய்யுங்கள். வணிக முடிவுகளை யோசித்து எடுங்கள். நிதி ரீதியாக, இக்காலம் வலுவாக இருக்கும். மேலும் நீங்கள் மிகவும் சாதகமான நிதி முதலீட்டு முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமாக இருக்காது.

துலாம் – துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எந்தவொரு பணியையும் கையாளும் போது மிகவும் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் இருப்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை, சில சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இந்த நாட்களில் விரும்பிய வேலை கிடைக்கும். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு சாதகமானது, மேலும் உங்கள் முதலீட்டில் திருப்திகரமான முடிவுகளைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் சில குழப்பமான சூழ்நிலைகளை அனுபவிக்கலாம். உங்கள் பொறுமையும் அமைதியும் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள், மேலும் நீங்கள் உடல் ரீதியாக மிகவும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

விருச்சிகம் – விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. தோல்வியால் உங்கள் மனதில் போட்டியும், பொறாமையும் உருவாகும். சில நிதி சிக்கல்களையும் சந்திக்கலாம். நீங்கள் கடன் பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சை கவனிக்கவும், கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை தொந்தரவு செய்யப்படுவதாக தோன்றும். எனவே அமைதியான மனதுடன் உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். இக்காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது தனியாக இருப்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

தனுசு – தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த காலகட்டத்தில், உங்கள் ஆளுமையில் சில மாற்றங்கள் இருக்கலாம். உங்கள் பணியை அதிக நம்பிக்கையுடன் முடிப்பீர்கள், இதன் காரணமாக நீங்கள் தொழில் முன்னணியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தைத் தொடர நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது உங்கள் தொழிலை மிகவும் திறமையாகக் கையாள உங்களுக்கு உதவக்கூடும். நிதியைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்தக் காலகட்டத்தில் நீங்கள் ஆற்றல் நிறைந்தவராகவும், மிகுந்த உற்சாகத்துடனும் இருக்கலாம். இருப்பினும், அதிக ஆற்றல் நிலை காரணமாக, நீங்கள் மனக்கிளர்ச்சியான முடிவுகளை எடுக்கலாம்.

மகரம் – மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். இது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியமும் இந்த நேரத்தில் மோசமடைகிறது. ஒட்டுமொத்தமாக, நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் உங்கள் நற்பெயருக்கு சில சேதங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் முழு ஆதரவையும் நீங்கள் பெறாமல் போகலாம், இது உங்களைத் தளர்ச்சியடையச் செய்யலாம். நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலம் உங்களுக்கு சாதகமானது. இருப்பினும், இக்காலத்தில் வயிறு மற்றும் பிற பகுதிகளில் பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே எச்சரிக்கையுடன் இருங்கள். இல்லாவிட்டால், அது நாள்பட்ட பிரச்சனையாக மாறிவிடும்.

கும்பம் – கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு நேர்மறையானதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனைக் காட்டுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் இதுவரை நினைத்துப் பார்க்காத புதிய வணிகத்தைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக, இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நீண்ட கால முதலீடுகளைச் செய்வீர்கள். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினருடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஃபிட்டாக இருப்பீர்கள். இதனால் திறமையாக வேலை செய்வீர்கள்.

மீனம் – மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறுவார்கள். இந்த காலகட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு அதிக முயற்சி செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் உங்கள் வணிகத்தை வளர்க்கவும் இதுவே சரியான நேரம். நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த முதலீடு உங்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் சீரான பணப்புழக்கம் இருக்கும். தனிப்பட்ட முறையில், இல்லற வாழ்க்கை உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் உறுதியாகவும், வலுவாகவும் இருந்தால், நாள்பட்ட நோயில் இருந்து விடுபடலாம். அதற்கு நீங்கள் சரியான உணவைப் பராமரிக்கவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *