
பொங்கல் தினத்திலும் விஜி -ஜீவா தம்பதியினரால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு!
தொடர்ச்சியாக பல்வேறு சமூகப்பணிகளை தங்கள் சொந்த நிதியில் செய்துவரும் சுவிஸ் நாட்டில் வசிக்கும் விஜயகுமாரன் ஜீவா தம்பதியினர் தைப்பொங்கல் தினத்தன்றும் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான வாழ்வாதார உதவியை வழங்கினர்.
கடந்த 13 ஆம் திகதி விஜயகுமாரன் (விஜி )அவர்களின் பிறந்தநாளையிட்டு அவரது மனைவி ஜீவா விஜயகுமாரன். கல்முனையில் நடைபெற்ற தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா நிகழ்வில் இந்த உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


