வடக்கின் பிரதம செயலாளர், மனைவி உட்பட்ட உயர் அதிகாரிகள் நால்வருக் கொரோனா!

வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் சமன் பந்துலசேனா உட்பட்ட வடக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருடைய மனைவிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

இதேவேளை வடக்கு மாகாணசபையின் மேலும் சில அதிகாரிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

வடக்குமாகாண சமூக சேவைத் திணைக்கள ஆணையாளரும் வடக்கு மாகாண பதில் காணி ஆணையாளருமான சோதிநாதன் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஆயகுலன் ஆகியோருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

முன்னதாக வடக்கின் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் பற்றிக் டிறஞ்சனும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply