வௌவால்கள் தங்குமிடமாக மாறிய வைத்தியசாலை! கிண்ணியா மக்கள் அசௌகரியம்

கிண்ணியா – மஜீத் நகர், வெல்லாம் குளம் கிராம மக்கள் வைத்தியசாலை இன்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

2010 ம் ஆண்டில் கட்டப்பட்ட கிராமிய வைத்தியசாலை இருந்தும், இற்றை வரைக்கும் திறந்து வைத்திய சேவை வழங்காமை அப்பகுதி மக்களின் வைத்திய சேவையை பூர்த்தி செய்யாமல் வெறுமனே பூட்டியே காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் சுமார் 1500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்

வைத்திய சேவையைப் பெறுவது என்றால் 25 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிண்ணியா வைத்தியசாலைக்கே போக வேண்டியுள்ளது

முச்சக்கர வண்டிக்கு 1000 ரூபா கொடுத்து செல்லவேண்டிய நிலை.

இந்த வைத்தியசாலை இயங்கினால் நாம் ஏன் அவ்வளவு சிரமப் பட வேண்டும். அத்துடன் இவ் வைத்தியசாலை காடு மண்டிக் காணப்படுகிறது.

வைத்தியசாலை உபகரணங்கள், தளபாடங்கள் கறையான் அரித்த நிலையில் வௌவால்கள் தங்குமிடமாக மாறி பாலடைந்து காணப்படுவதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல இலட்சம் ரூபாவை செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட இவ் வைத்தியசாலை பிரயோசனமற்றுக் கிடப்பதாகக் கூறுகின்றனர்.

இதனை விரைவில் திறந்து வைத்திய சேவையை வழங்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடல்வழியாக தமிழகத்திற்குள் நண்பர்களை காண நுழைந்த யாழ் நபர்; சைதாப்பேட்டை சிறையில் அடைப்பு

Leave a Reply