திருமலை – கந்தளாயில் இளம் தாயொருவருக்கு நேர்ந்த துயரம்

கந்தளாயில் இளம் தாயொருவருக்கு பாம்பு தீண்டியதில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் இளம் தாயொருவருக்கு பாம்பு தீண்டியுள்ளது.

இதையடுத்து, அவரை உடனடியாக கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று(16) இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் 24 வயதுடைய தாயொருவருக்கே பாம்பு தீண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராறு பகுதியில் தனது வீட்டு வளவினை துப்பரவு பணிகளை செய்த வேளை பாம்பு தீண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், எந்தவகை பாம்பு தீண்டியது என்பது சரியாக தெரியாது எனவும் கால்கள் வீங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *