எரிவாயு சிலிண்டர்களுக்காக இனி வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை!

எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதால் மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை.

சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படும்.

எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ நிறுவனம் அறிவித்திருக்கின்றது

Leave a Reply