யாழில் பேருந்து குடைசாய்வு – பலர் காயம்!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

காரைநகர் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கல்லுண்டாய்  வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply