கல்முனை யாட் வீதி – கோடை ஆரம்பித்தும் வடிந்தோட இடமில்லாமல் தேங்கி நிற்கும் நீர் மாநகரசபையின் அசமந்த போக்கா காரணம்?

கல்முனை யாட் வீதி – கோடை ஆரம்பித்தும் வடிந்தோட இடமில்லாமல் தேங்கி நிற்கும் நீர் மாநகரசபையின் அசமந்த போக்கா காரணம்?

கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட யாட் வீதியானது இன்று இவ்வாறு காட்சியளிக்கின்றது.

மழைகாலம் முடிந்தபின்னும் அபிவிருத்தி என்ற வடிகானுக்கு பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கின்ற காரணத்தாலும் மாநகரசபை இவ் வீதியில் தங்கியுள்ள நீரை வடிந்தோட வழிவகை செய்யாத காரணத்தாலும் இந் நிலை காணப்படுகின்றது.

வாக்கிற்காக வந்த மாநகரசபை உறுப்பினர்கள்(வட்டாஇன்று இந் நிலைமையில் வரவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த வீதியானது கேந்திர முக்கியத்துவமிக்க வீதியாகும்.குறிப்பாக வைத்தியசாலைக்கு நோயாளிகளும் இரு தேசியப்பாடசாலைக்கான மாணவர்களும் நீதிமன்றத்துக்காக மக்களும் உபயோகிக்கும் வீதியாகும்.இக் குறித்த வெள்ள நீரின் நீண்ட நாள் தேக்கத்தால் டெங்கு,சிக்குன்குனியா ஏற்படுமா எனும் அச்சத்துடனே வாழ்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

Leave a Reply