களு கங்கையில் இருவர் நீரில் மூழ்கினர். 10வயது சிறுவனை காணவில்லை!

களு கங்கையில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கினர். 10வயதான சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது சம்பவத்தின்போது 22 மற்றும் 40 வயதான இரண்டு ஆண்களே நீரில் மூழ்கினர்.

ரத்தினபுரி குருவிட்ட ஸ்ரீ பலபத்தல, சிறிபாகம ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.இதன்போதே 10 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.

Leave a Reply