கிழக்கு பல்கலை திருமலை வளாகத்தில் கொரோனா கொத்தணி!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி தொலைத்தொடர்பு, வர்த்தக பீடம் மற்றும் சித்த ஆயுர்வேத பீடம் ஆகியவற்றில் கல்வி பயிலும் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேம் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் ஊடாக, ஏனைய மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தங்குமிட விடுதியொன்றிலும், அவர்களுடன் தொடர்புகளை பேணிய 140 பேர் வேறொரு தங்குமிட விடுதியொன்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply