அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு – ஐவர் காயம்

அம்பாறை தமனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply