எண்ணெய் கப்பல் நாட்டுக்கு வராவிடின் மின்சாரம் தடைப்படலாம்!

எண்ணெய் கப்பலொன்று நாட்டுக்கு வராவிடின், மின்சார நெருக்கடி நிலை ஏற்படும் என கனிய எண்ணெய் தொழிற்சங்கத் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

25ஆம் திகதிக்கு முன்னர் எண்ணெய் கப்பலொன்று இலங்கைக்கு வரவழைக்கவில்லை யென்றால், முன்னைய நெருக்கடி நிலை ஏற்படலாம்.

இன்று நாட்டில் நம் அனைவரும் நன்கு அறிந்த விடயம் கனிய எண்ணெய் பிரச்சினை.

கடந்த ஆண்டுகளில் மின்சாரம் உற்பத்திக்கும் கனிய எண்ணெய் பயன்பட்டது. ஆனால் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை.

ஏனென்றால் அதிக மழை வீழ்ச்சி காணப்பட்டது. எனவே நீர் வழி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இன்று நிலை அவ்வாறு இல்லை.

எனினும், கடந்த ஒரு மாத காலமாக கனிய எண்ணெய் பற்றாக்குறையின் போது மின்சார உற்பத்திக்கு அதிகளவிலான கனிய எண்ணெய், அதாவது பெற்றோல் போன்றவை வழமைக்கு மாறாக அதிக அளவில் தேவைப்படுகிறது.

எனவே வரும் காலகட்டத்தில் கனிய எண்ணெய் பற்றாக்குறை அதிகமாகவே காணப்படும்.

நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் பற்றாக்குறை என்பது பாரிய நெருக்கடியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இளைஞனும் சிறுமியும் செய்த மோசமான செயல்!

Leave a Reply