எல்லைப் பகுதிகளை உரிமைக்கோரும் நேபாளம் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காணவேண்டும் என வலியுறுத்து!

இந்தியா – நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபாணி ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு உட்பட்டவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து நேபாள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபாணி ஆகியவை நேபாளத்துக்கு உட்பட்ட பகுதி.

அங்கு நடந்து வரும் அனைத்து கட்டுமான பணிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்தி பேச்சு வாயிலாக எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட சில உள்கட்டமைப்புகளை மத்திய அரசு விரிவுப்படுத்தி வருகிறது. இதற்கு நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply