ஒருகிலோ அரிசியின் விலை 300 ரூபா – ஒத்துக்கொண்டார் வர்த்தக அமைச்சர்

நாட்டில் தற்போது அரிசியின் விலை 300 ரூபாவாக உயரும் சாத்தியம் காணப்படுவது உண்மை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் , கொவிட் தொற்று காரணமாக மக்களின், அனைத்து அன்றாட தேவைகளிலும் சிக்கல் காணப்படுகிறது.

வரலாற்றில் அதிகப்படியான அரிசி பற்றாக்குறை இம்முறை ஏற்பட்டுள்ளது .மக்கள் 300 ரூபாவுக்கு அரிசி வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் 1 கிலோகிராம் அரசியை 300 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய இருப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சதோச நிறுவனம் மூலம் 20 பொருட்கள் அடங்கிய பொதியை 3 ஆயிரத்து 998 ரூபாவுக்கு வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply