இன்றைய ராசிபலன் – 18 ஜனவரி 2022

இன்றைய ராசிபலன் 18 ஜனவரி 2022: Daily Horoscope, January 18 

மேஷம்: எதிர்பார்ப்பவையில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்ற குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். சிறந்த பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள்வசூலாவதில் தாமதம் ஏற்படும்.உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போதுஉங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

துலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல்நிலை சீர் ஆகும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். வெற்றி பெறும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *