வவுனியாவில் கைதி ஒருவர் தப்பி ஓட்டம்

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.

துரிதமாக செயற்பட்ட பொலிசார் குறித்த நபரை மீளவும் கைது செய்துள்ளனர்.

நேற்று (17) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தப்பியோடியவர் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த நபரை தேடும் பணியில் சிறைச்சாலை உத்தியோத்தர்களும், பொலிசாரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

பொலிசார் துரிதமாக செயற்பட்டு வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் சீசீரீவி கமராவின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டு குறித்த நபரை மீளவும் கைது செய்துள்ளனர்.

ஈழத் தமிழர்களின் வாழ்வு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது! சிறிதரன் எம்பி

Leave a Reply