ஒமிக்ரோன் தொற்று : தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஜென்னோவா நிறுவனம்!

ஒமிக்ரோன் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் புனேயைச் சேர்ந்த ஜென்னோவா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜென்னோவா நிறுவனம் ஆர்என்ஏயை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்டச் சோதனைத் தரவுகளை இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் வழங்கியுள்ளது.

குறித்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை நிறைவடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒமிக்ரோன் தடுப்பு மருந்தின் செயல்திறன், நோய் எதிர்ப்பாற்றல் குறித்து அறிய விரைவில் மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *