கொரோனா நோயாளர்களுக்கு வந்த சோதனை! வெளியான தகவல்

பிராணவாயு தேவையுடைய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிபோது, இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இதனை தெரிவித்தார்.

மேலும், கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 சத்திர சிகிச்சை கட்டில்களில், 52 கட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது.

எனவே, பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply