இருவேறு பிரதேசங்களில் காணாமல் போன இருவரின் சடலங்கள் மீட்பு

கேகாலை – களுத்துறை ஆகிய மாவட்டங்களின் இருவேறு பிரதேசங்களில் காணாமல் போன இருவரின் சடலங்கள் நேற்று (17) மீட்கப்பட்டன.

இதற்கமைவாக கேகாலை தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிய மழை பகுதியில் கற்குழியிலிருந்து ஆணொருவரின் சடலத்தை, தெஹியோவிட்ட பொலிஸார் நேற்று (17) மீட்டுள்ளனர்.

அட்டளுகம வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை அளுத்கம பிரதேசத்தில் காணாமல் போயிருந்த பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அளுத்கம புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 57 வயது பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செங்கல் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாகவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply