
திருகோணமலை – தோப்பூர் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள வயல் நிலங்களை சில தினங்களாக யானைகள் துவம்சம் செய்துவருவதாக பாட்டாளிபுரம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு சுமார் 20 ஏக்கர் வேளாண்மை செய்கையை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
யூரியா பசளை இல்லாமல் ஏற்கனவே தமது வயல் நிலங்கள் விளைச்சல் குறைவடைந்து காணப்படுகின்ற நிலையில் மேலும் காட்டு யானைகள் தமது வயல் நிலங்களை துவம்சம் செய்வதால் தாம் பாதிப்படைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு அரசியல்வாதிகளிடமும், அரச அதிகாரிகளிடம் சுமார் 20 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றபோதிலும் இன்னும் யானை பாதுகாப்பு வேலி அமைத்து தரப்பட வில்லை எனவும் கவலை வெளியிடுகின்றனர்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தமது வயல் நிலங்களை பாதுகாப்பதற்கு யானை பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு தோப்பூர் – பாட்டாளிபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



