500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும் – கப்ரால்

<!–

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும் – கப்ரால் – Athavan News

இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று வழங்கப்படும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்பின்னர் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

கடனை திருப்பி செலுத்தியதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Leave a Reply