எமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை! ஜனாதிபதி தெரிவிப்பு

எமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை, இனியும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை இன்று காலை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில், வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் இலாபத்துக்காக மக்களை தூண்டும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு அரசியல் வாதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யாழ். நாவற்குழியில் கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து!

Leave a Reply