முழுமையாக முடங்கும் இலங்கை – கைவிரித்த அமைச்சர்!

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் டீசல் கையிருப்புகளை இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்தால் மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில், மின்சாரத்திற்காக எரிபொருள் வழங்கப்படவில்லை. டொலர்களை வழங்கினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை இலங்கை மின்சார சபையிடம் வழங்க முடியும்.

டொலர் பற்றாக்குறையால் இலங்கை கடற்பரப்பில் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளது. டொலர் வழங்கினால் அதில் ஒன்றை உடனடியாக விடுவித்து டீசல் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் மின்சாரம், போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *