காணாமல்போன வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

புத்தளம் – சாலியாவௌ பகுதியில் காணாமல்போன வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாலியாவௌ 17ஆம் கட்டை, அளுத்கம பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு சடலாம மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் திகதி குறித்த பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண், காணாமல் போயிருந்தார்.

இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, சாலியாவௌ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

காணாமல் போன குறித்த வயோதிப பெண்ணை தேடி சாலியாவௌ பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், 15 ஆம் திகதி காணாமல் போன குறித்த வயோதிப பெண் , அதே பிரதேசத்தில் உள்ள கற்குவாரிக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாலியாவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply