அரசாங்கம் பொதுமக்கள் மீது பாரத்தை சுமத்தாது!

எந்தவொரு நேரத்திலும் மக்கள் மீது பாரத்தை சுமத்தாமல் அதனை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் வெளிநாட்டு நாணய இருப்பு தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரியும். இந்த நெருக்கடியை தீர்க்கும் நிலைக்கு நாட்டைக் கொண்டுவர வேண்டும்.

ஆகவே வெளிநாட்டு நாணய இருப்பை வலுப்படுத்தும் வகையிலான தொழிற்துறைகளை வலுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசாங்கம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துள்ளது. இவ்வாறான துறைகளை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அத்தியாவசியமற்ற விடயங்களை மேலும் கட்டுப்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

எந்தவொரு நேரத்திலும் மக்கள் மீது பாரத்தை சுமத்தாமல் அதனை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிச்சயம் மேற்கொள்ளும்.- என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *