லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிப்பு

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோ லாப்ஃஸ் எரிவாயு கொள்கலனின் விலை 1,856 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 743 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

Leave a Reply