மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமனம்!

<!–

மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமனம்! – Athavan News

மட்டக்களப்பு மாவட்ட பதில்  பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் தொடர்பாக வைத்தியர் ஜி.சுகுணன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “சுகாதார சேவைகள் பணிப்பாளரால் எனக்கு கடிதம் ஒன்றின் ஊடாக தேவை கருதி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவை பதில் பணிப்பாளராக கடமையாற்றுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் என்னை கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடமாற்றம் பெற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்டேன்.

மேலும் எனது பதிவிக்காலத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு உச்சக்கட்டத்தில் எனக்கு கிடைக்கப்பெற்து. இதனால்  மக்கள் உடனடியான  தகவல்களை பெறுவதற்கு பங்களிப்பு வழங்கிய  ஊடகவியலாளர்கள் ஊடகங்களுக்கு  நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply