ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான தேசிய மாநாடு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மாவட்ட நிர்வாக அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் கட்சியின் நிர்வாக அமைப்பாளர்கள், கட்சிச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.