யாழ். கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பலொன்று வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
நேற்று அதிகாலை (11) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் தாயும், மகளும் தனித்திருந்த நிலையில் வீட்டிற்குள் முகமூடி அணிந்தவாறு கொள்ளையர்கள் இருவர் நுழைந்துள்ளனர்.
தாயையும், மகளையும் மிரட்டி வீட்டிலிருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.