கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று முன்தினம் (10) உறுதி செய்யப்பட்டிருந்தது.
குறித்த உறுப்பினருடன் தொடர்பிலிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (12) தவிசாளருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.