எல்லை தாண்டிய தமிழக மீனவர்களை கல்லால் அடித்து விரட்டிய இலங்கை கடற்படை

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருகின்ற இந்திய மீனவர்களிடையே மிலேச்சத் தனமான தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ்நாடு- மண்டபம் பகுதி நான்கு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கல்லால் அடித்து விரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

குறித்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் வாடி பகுதியில் இருந்து வடக்கு கடலில் IND TN 11 MM 750 என்ற விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

குறித்த நான்கு மீனவர்களும் எல்லை தாண்டிய நிலையில், இலங்கை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அதிகாலை சுமார் 01:00 மணியளவில் இலங்கைக் கடற்படையினரால் கற்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் தாக்குதலினால், விசைப்படகு டிரைவரின் தலையில் பலத்த காயம் ஏற்படுள்ளதோடு, அவர்கள் மீண்டும் திரும்பிச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

இதன்போது, தாக்குதலுக்கு உள்ளான மீனவரின் தலையில் நான்கு தையல் போடப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டனர்.

மேலும் இது சம்பந்தமாக தற்போது மண்டபம் மீன்வளத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *