மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லை – வவுனியா பொலிஸில் முறைப்பாடு

வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

வவுனியா – 1 ஆம் ஒழுங்கை – மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி (வயது 32) மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா (வயது 5), கனிஸ்கா (வயது 4)  ஆகிய மூவரையும் நேற்று முன்தினம்  முதல் காணவில்லையென அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கடையொன்றிற்கு வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பியபோதே வீட்டில் மனைவி பிள்ளைகளை காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காணாமல் போன பெண் மற்றும் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0777111103, 0775945839 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *