நல்லூர் வரவேற்பு வளைவில் கொடி கட்டும் நிகழ்வு!

நல்லூர் வரவேற்பு வளைவில் நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை அடையாளப்படுத்தும் முகமாக சம்பிரதாய பூர்வமாக கொடி கட்டும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு இடம்பெற்றது

நல்லூர் ஆலய அறங்காவலர் சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொடி கட்டும் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நல்லூர் ஆலயத்தை அடையாளப்படுத்தும் வகையில் செம்மணி பிரதான வீதியில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியினால் 8 மில்லியன் ரூபாய் நிதியில் நல்லூர் ஆலய நிர்வாகத்தினரால் வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டு, இவ்வருடம் தைப்பொங்கல் தினத்தன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply