15 வயது சிறுமி விற்பனை – 4 இணையத்தளங்களுக்கு தடை!

<!–

15 வயது சிறுமி விற்பனை – 4 இணையத்தளங்களுக்கு தடை! – Athavan News

கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வௌியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


Leave a Reply