கொரோனா தொற்று: மேலும் 13 பேர் இறப்பு, 672 பேருக்கு கொரோனா – முழு விபரம்

கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியான மேலும் 672 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 98 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 14 ஆயிரத்து 462 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply