அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க நடவடிக்கை – ஜெய்சங்கர்

<!–

அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க நடவடிக்கை – ஜெய்சங்கர் – Athavan News

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜயீத்துடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியதாகவும், அவர் கூறியுள்ளார்.  அதேநேரம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜயீத் இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்படும் என, ஐக்கிய அரபு அமீரக அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக இந்திய தூதரகம் அமீரக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.


Leave a Reply