குளிரூட்டப்பட்ட அறைகளில் 2 முகக்கவசங்களும், 2 மீட்டர் இடைவெளியும் அவசியம்

குளிரூட்டப்பட்ட அறைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் முடிந்தவரை இரண்டு முகக்கவசங்களை அணிவதோடு இரண்டு மீற்றர் சமூக இடைவெளியை போணுமாறு சுகாதார தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான மருத்துவ வல்லுநர் நதீகா ஜானகே மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் டெல்டா திரிபு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் டெல்டா திரிபு பரவுவதைத் தடுக்க குளிரூட்டப்பட்ட இடங்கள் மற்றும் உள்புற அமைப்புகளில் பணியில் இருக்கும் போது இரண்டு முகக்கவசங்களை அணியவேண்டும்.

இரட்டை முகக்கவசம் டெல்டா வகையை திறம்பட சமாளிக்க உதவும்.

தனிநபர்கள் இரண்டு மீற்றர் இடைவெளியை மூடப்பட்ட இடங்களுக்குள் பேண வேண்டும்.

முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகள் உள்ளிட்ட தற்போதைய வழிகாட்டுதல்கள் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த போதுமானது.

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபரிடம் மற்ற விகாரங்களை விட வைரஸின் பல நகல்களை உருவாக்கும்.

எனவே வைரஸ் வேகமாக பரவுகிறது.

சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் உதவ முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *