கற்பாறைகளுக்கு இடையில் ஆணின் சடலம் மீட்பு!

கேகாலை, தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

45 வயதான ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளிலும் பாதிப்பு!

Leave a Reply