கெரவலப்பிட்டிய ஒப்பந்தம் : இன்று முதல் மனுக்கள் மீதான விசாரணை !

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலயத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதக்கின்றன ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.

அதன்படி, உயர் நீதிமன்றத்தில் இன்றும் (புதன்கிழமை), நாளையும், வெள்ளிக்கிழமையும் மனுக்கள் மீதான பரிசீலனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த மனு மீதான பரிசீலனையின் போது நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய இல்லாத காரணத்தினால், விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

எல்லே குணவன்ச தேரர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Leave a Reply