சடலம் எரிக்கும் சுடலை இரண்டு திடீரென மூடல்!

இரத்தினபுரி மாநகர சபைக்குரிய 2 தகனச்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என, இரத்தினபுரி மாநகர சபையின் நகராதிபதி டிரோன் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

திருத்த வேலைகள் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றை மூடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தகனச்சாலைகளில் 150 சடலங்கள் தகனம் செய்ததன் பின்னர், தகனச்சாலைகளில திருத்த வேலைகள் செய்ய வேண்டும். எனினும் கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு 8- 10 சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

கடந்தமுறை பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதும் இதுவரை 700க்கு அண்மித்த சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. குறித்த 2 தகனச்சாலைகளையும் திருத்தம் செய்யும் அவசியம்

ஏற்பட்டுள்ளதால் அவற்றின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *