யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இன்று காலை தடம்புரண்ட வாகனம் : விபத்தில் 20 பயணிகள் காயம், 5 பேர் அவசர சிகிச்சை பிரிவில்

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 5 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply