முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் மூடப்பட்ட நிலையில், சந்தை வணிகர்களுக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் பெறுபேறுகள் நாளை (வெள்ளிக்கிழமை) கிடைக்கவுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் எழுந்தமான அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது 65 அன்டிஜன் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதன் படி 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் பலர் உலாவி திரிவதை இதன் ஊடாக அவதானிக்க முடிந்துள்ளது,
எனவே மக்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன், வெளியில் அநாவசியமாக நடமாட்டத்தினை கட்டுப்படுத்துமாறு சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்.