கைக்குண்டு மீட்பு தொடர்பில் மேலுமொரு சந்தேகநபர் கைது

Man in handcuffs behind his back

கொழும்பு, பொரளையிலுள்ள தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த மேலுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரே இவ்வாறு கொழும்பு, தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சில தினங்களுக்கு முன்னர் எம்பிலிப்பிட்டிய பனாமுர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலுக்கமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply