இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் வெற்றி!

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் வெற்றிபெற்றுள்ளார்.

முழங்கை காயத்தில் இருந்து அன்மையில் மீண்ட சிட்சிபாஸ், சுலபமாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னரே வெற்றிபெற்றார்.

முதல் சுற்று போட்டியில் சுவீடன் வீரரான மைக்கேல் யெமரை எதிர்கொண்ட சிட்சிபாஸ் 6-2, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில் நாளை இடம்பெறும் இரண்டாவது சுற்று போட்டியில் அர்ஜென்டின வீரர் செபாஸ்டியன் பேஸ்ஸை சிட்சிபாஸ் எதிர்கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *