இலங்கைக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலவசமாக வழங்க சீனா தீர்மானம்!

ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு இலவசமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனத் தூதுவரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த அரிசித் தொகை இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

இது குறித்து சீனத் தூதுவர் தமக்கு அறிவித்துள்ளதாக நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுகுறித்த கோரிக்கை கடிதத்தை சீனத் தூதுவரின் அறிவுறுத்தலுக்கமைய, வெளிவிவகார அமைச்சு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply