முகமாலையில் அடையாளப்படுத்தப்பட்ட மனித எச்சம்!

முகமாலைப் பகுதியில் மனித எச்சம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்றைய தினம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவானுக்கு தகவல் வழங்கப்பட்டது.

அப்பகுதிக்கு இன்று விஜயம் செய்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டிருந்தார்.

நீதிவானின் அனுமதியுடன் இன்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் 4 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி

Leave a Reply